யாழில் பனை மரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

Tuesday, March 6th, 2018

பனை மரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இரண்டரை மாதங்களின் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பு சாந்தையை சேர்ந்த 38 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான துரைச்சாமி ஶ்ரீகாண்டீபன் என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி பனை மரத்தில் ஓலை வெட்டுவதற்காக ஏறிய போது தவறுதலாக கீழே விழுந்த இவர் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்திருந்தார். உடனடியாகசங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கோமா நிலையில்இருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரண விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

Related posts: