யாழில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது

Sunday, June 5th, 2016

யாழ். மாவட்­டத்தில் சமூக விரோத செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் தேடப்­பட்­டு­வரும் தேவா மற்றும் சன்னா ஆகி­யோ­ருடன் தொடர்­பு­டை­வர்கள் என்ற சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் ஐவரை சுன்­னாகம் பொலிஸார் நேற்று முன்­தினம் கைது செய்­தி­ருந்­தனர். குறித்த ஐவ­ரையும் உடுவில் கொட்­டி­யா­லடி பகு­தியில் வைத்து சுன்­னாகம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி துஸ்­மந்த மற்றும் பெரும் குற்­றத்­த­டுப்பு பிரிவு பொறுப்­ப­தி­காரி பிய­ஷாந்த பண்டார தலை­மை­யி­லான குழு­வினர் கைது செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் பண்­டத்­த­ரிப்­பு, தெல்­லிப்­பழை மற்றும் ஏழாலை பகு­தியை சேர்ந்­த­வர்கள் எனவும் இவர்கள் யாழ்ப்­பாணம், சுன்­னாகம், புத்தூர் பகு­தி­களில் உள்ள பிர­பல பாட­சா­லை­களைச் சேர்ந்த உயர்­தர வகுப்பு மாண­வர்கள் என்­பதும் ஆரம்ப கட்ட விசா­ர­ணை­களின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளன

குறித்த கைது சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது

நேற்­று­முன்­தினம் மாலை குறித்த ஐவரும் மது போதையில் தலைக்­க­வசம் இன்றி மோட்டார் சைக்­கிளில் சுன்­னாகம் பகு­தியில் பய­ணித்­துள்­ளனர்

இந்­நி­லையில் குறித்த நபர்­களை பொலிஸார் விரட்டிச் சென்று சோதனை நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர்

இதன் போது குறித்த நபர்­க­ளி­ட­மி­ருந்து கோடரி மற்றும் துடுப்­பாட்ட மட்­டைகள் என்­ப­ன­வற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்

மேலும் குறித்த நபர்­க­ளிடம் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களில் இவர்­களில் மூவர் யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்ற பல்­வேறு சமூக விரோத செயல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட தேவா மற்றும் சன்னா ஆகி­யோ­ருடன் தொலை­பேசி மூலமும் சமூக வலைத்­த­ளங்­க­ளி­னு­டா­கவும் தொடர்­பு­களை பேணி வந்­துள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன், இந்த மூவரும் தேடப்­பட்டு வரும் தேவா மற்றும் சன்னா ஆகி­யோ­ருக்குப் பணம் சேக­ரித்து வழங்­கி­யுள்­ள­மையும் தெரி­ய­வந்­துள்­ளது

இதே­வேளை, கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் ஒருவர் கடந்த ஒரு மாதத்­துக்கு முன்னர் வேறொரு குற்­றத்­துக்­காக கைது செய்­யப்­பட்டு பொலிஸ் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது

Related posts: