யாழில் கோர விபத்து : இளைஞன் உயிரிழப்பு!

Tuesday, June 12th, 2018

வடமராட்சி மற்றும் தென்மராட்சிக்கு இடையே இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 22 வயதான இளைஞர் செலுத்திய உந்துருளி வீதியை விட்டு விலகி பாதுகாப்பு சுவர் ஒன்றில் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மருதங்கேணி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: