யாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி கொள்ளை!

Tuesday, April 17th, 2018

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அளவெட்டி, மகாத்மா வீதியில் உள்ள வீட்டுக்குள் தலைக்கவசம் அணிந்து முகத்திற்கு கறுப்புத் துணி கட்டியவாறு நுழைந்த 3 கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில்இருந்தவர்களை சத்தம் போடக் கூடாது என மிரட்டி 15 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் போது மிளகாய்த் தூளை வீடு முழுவதும் தூவி விட்டு சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு தெல்லிப்பளை பொலிஸார் சென்றதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related posts: