யாழில் கால்பந்தாட்ட நடுவருக்கு வாள்வெட்டு!

Thursday, February 15th, 2018

யாழ்ப்பாணம் அராலி – தெல்லிப்பளை விளான் சந்தி வீதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் கால்பந்தாட்ட நடுவர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது என இளவாளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உரும்பிராயைச் சேர்ந்த 58 வயதுடைய ஜெயக்குமார் என்பவரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வீதியால் பயணித்த கால்பந்தாட்ட நடுவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய வாள்வெட்டுக் கும்பலே வெட்டி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இளவாளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: