யாழில் காலாவதியான பொருட்கள் விற்பனை: நுகர்வோர் விசனம்!

Monday, August 15th, 2016

யாழ். நகரிலும் அதனை அண்டியுள்ள பகுதிகளிலும் சில வர்த்தக நிறுவனங்கள் சுகாதார விதிமுறைகளுக்கு மாறாக காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர். பருப்பு, பைக்கற்றுக்களில் அடைக்கப்பட்ட பிஸ்கட் வகைகள், சொக்லேட் வகைகள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு காலாவதியான பின்பும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறாகக் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதால் பொதுமக்கள் நோய்த் தாக்கத்திற்கு இலக்காகும் அபாயம் காணப்படுவதால் இவ் விடயம் தொடர்பில் யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் என நுகர்வோர் கேட்டுள்ளனர்.

Related posts: