யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

Monday, October 10th, 2016

யாழில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தில் இன்று (10) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘எழுந்து நிற்போம்’ எனும் தொனிப்பொருளில் யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் ஒன்றிணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.மேலும் ஜோன் பொஸ்கோ கல்லூரி, யாழ்.இந்து ஆரம்ப பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகள் மற்றும் யாழ்.மாநகரசபை ஆகியவற்றிலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

வட மாகாணத்தில் குறிப்பாக யாழில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் வாகன விபத்துக்களால் பலரது உயிர் காவுகொள்ளப்பட்டுள்ள நிலையில், இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டது.

jaffna-protest-2.jpeg

Related posts: