யாழில் கடந்த 3 மாதங்களில் மூவாயிரம் கிலோ கஞ்சா மீட்பு!

Wednesday, August 8th, 2018

யாழ் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூவாயிரம் கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சிரேஷேட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

கஞ்சா போன்று தற்போது ஹெரோயின் பாவனையும் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று இத் தகவலை அவர் தெரிவித்தார்.

அதிகரித்து வருகின்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related posts: