யாழில் உள்ளுராட்சித் தேர்தல் முறைகள் தொடர்பான விசேட கருத்தரங்கு!
Sunday, November 26th, 2017யாழ்ப்பாணம் சிந்தனைக்கூடம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் உள்ளுராட்சித் தேர்தல் முறைகள் தொடர்பான விசேட கருத்தரங்கொன்று சனிக்கிழமை(25) யாழ். இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள சிந்தனைக் கூடக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இன்று முற்பகல்-10.30 மணி முதல் சிந்தனைக் கூடப் பணிப்பாளர் பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் புதிய உள்ளுராட்சித் தேர்தல் முறைகள், வேட்பாளர்களுக்கான விதிமுறைகள், வாக்காளர்களுக்கான வழிகாட்டல்கள் எனும் தலைப்புக்களில் யாழ். மாவட்டப் பிரதித் தேர்தல் ஆணையாளர் தனபாலசிங்கம் அகிலன் விசேட கருத்துரை ஆற்றினார். கருத்துரையினைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலின் போது உள்ளுராட்சித் தேர்தல் முறைகள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு யாழ். மாவட்டப் பிரதித் தேர்தல் ஆணையாளர் தெளிவான விளக்கமளித்தார்.
Related posts:
|
|