யாழில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியீடு!

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். குடாநாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு நேற்றுப் புதன்கிழமை(19) யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் வ. இன்பம் தலைமையில் நடைபெற்றது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளரினால் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கும் நோக்கில் பிரதம விருத்தினராகக் கலந்து கொண்ட யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா. செந்தில் நந்தனனிடம் ஆய்வு அறிக்கை கையளிக்கப்பட்டது.
இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய நிலைமைகள், இடம்பெயர்ந்த மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள், இடம்பெயர்ந்த மக்கள் மீன்பிடித் தொழிலில் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த ஆய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|