யாழிலிருந்து வெளியேறி நாட்டின் பல பகுதிகளில் தலைமறைவாகியுள்ளனர் ஆவா குழுவினர் – பொலிஸார் !

Tuesday, March 21st, 2017

ஆவா குழு என்ற பெயரில் யாழ். குடாநாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் இடுபடும் சிலர் தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி நாட்டின் பல பகுதிகளில் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஆவா குழு போன்று வடமாகாணத்தில் இயங்கும் அனைத்து குழுக்களிலும் உள்ள நபர்களை விரைவில் கைது செய்து, குடா நாடு உள்ளிட்ட வட பிராந்தியத்தில் நிலவும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த குழுவை சேர்ந்த ஒருவர் தெஹிவளை பகுதியில் நேற்று முன்தினம் (18) கைது செய்யப்பட்டதுடன், அவரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: