மோட்டார் சைக்கிள் தீக்கிரை நெடுங்கேணியில் ஒருவர் கைது!

புதுவருட தினத்தில் வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலையடுத்து மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, நெடுங்கேணி கற்குளம் சந்தியில் புதுவருட தினமான ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் இரண்டு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்படிருக்கும் இளைஞனின் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்குத் தீ வைத்து எரியூட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கூட்டமைப்பின் நெடுங்கேணி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ம.செந்தூரன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஓர் அறிவிப்பு !
தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தாமதமாகும் - நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் ...
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் அரையாண்டில் ஒரு மில்லி...
|
|