மோசடிகள் தொடர்பான 171 முறைப்பாட்டு விசாரணைகள் பூர்த்தி!

Saturday, December 17th, 2016

ஊழல் மோசடிகள் அரச சொத்து துஸ்பிரயோகம் அதிகார துஸ்பிரயோகம் போன்ற பாரிய குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி விசாரணைக் குழு ஒன்றை அரசாங்கம் நிறுவியது.

இந்த விசாரணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்ற 171 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன.

எதிர்வரும் வாரத்தில் விசாரணைகள் பூர்த்தியான 6 முறைப்பாடுகள் தொடர்பிலான விசேட அறிக்கையொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த ஆறு சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் பற்றிய விசாரணை அறிக்கை முழுமையாக பூர்த்தியாகியுள்ளது எனவும் மேலும் மூன்று விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தேசிய பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆணைக்குழுவிற்கு மொத்தமாக 357 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் 171 முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

pr

Related posts: