மொழி வகுப்புக்களை நடத்த வளவாளர்கள் இணைப்பு

கலாசார மத்திய நிலையம் மற்றும் கிராமிய நிலையங்களில் கலை மற்றும் மொழி வகுப்புக்களை நடாத்திச் செல்வதற்கான வளவாளர்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளனர்.
உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவில் இயங்கிவரும் கலாசார மத்திய நிலையம் மற்றும் கிராமிய நிலையங்களில் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம், சித்திரமும் வடிவமைப்பும், நாடகமும் அரங்கியலும், சிங்கள மொழி, ஆங்கில மொழி மற்றும் இசைக்கருவிகள் ஆகிய பாடநெறிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பாடநெறிகளை கற்பிக்க ஆர்வமுடைய தென்மராட்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வளவாளர்கள் (ஆசிரியர்கள் ) தங்களது சுயவிபரங்களை 21 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலக பிரிவுக்கு நிலையப் பொறுப்பதிகாரி, கலாசார மத்திய நிலையம், குடயமின், வரணி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார்.
Related posts:
|
|