மே தினவருமானத்தில் இலாபம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

மே தின கொண்டாட்டங்களுக்கு பேருந்துகளை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபை 45 மில்லியன் ரூபாவை சம்பாதித்துள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் ராஜா குணதிலக்க தெரிவித்துள்ளார்.
மே தினக் கூட்டங்களுக்காக 4 ஆயிரம் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் குழுக்கள் மே தினக் கூட்டங்களுக்காக நேற்றைய தினம் பணத்தை செலுத்தி 3 ஆயிரத்து 500 பேருந்துகள் பெற்றுக்கொண்டுள்ளன.
இதனால், நேற்றைய தினம் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளுக்கு போதிய பேருந்தகள் இல்லாமல் போயுள்ளதுடன்,இன்று நிலைமை வழமைக்கு திரும்பும் எனவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதி முகாமையாளர் கூறியுள்ளார்.
Related posts:
அமரர் சிறிலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
இலங்கையில் மேலும் 26 கொவிட் மரணங்கள்: 3 மாத குழந்தையும் பலி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!
அரச பணியாளர்களுக்கு தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் - அமைச்சரவையும் அங்கீகாரம்!
|
|