மேல்மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

Tuesday, February 21st, 2017

மேல் மாகாணத்தில் 250 இற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று மேல்மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவன்சவினால் இன்று பிற்பகல் மேல்மாகாண நுண்கலை மண்டபத்தில் நியமனக் கடிதங்களை தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.சமீபத்தில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய இந்த பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

மேல் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்காக மேலும் பல பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்றும் அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Ministry_of_Education-1-4

Related posts: