மூன்று மில்லியன் பெறுமதியான தங்கத்துடன் பெண் ஒருவர் கைது!

Sunday, October 2nd, 2016

30 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய பெருந்தொகை தங்கத்துடன் பெண்ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இன்று ஞாயிறு அதிகாலை காலை துபாயில் இருந்து வந்த சிறிலங்கன் எயார்லைன்ஸைக்குச் சொந்தமான யூ.எல்.230 என்ற விமானத்திலேயே இலங்கையை வந்தடைந்துள்ளார்.

சந்தேகநபர் 60 வயதான பெண் தனது நெஞ்சுப் பகுதியில் மிகவும் சூட்சமமானமுறையில் இந்த தங்கத்தை மறைத்து நாட்டுக்கு கடத்தி வந்துள்ளார்.விமான நிலைய அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தங்கம் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்தபெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

gold

Related posts: