மூன்று மாகாணங்களுக்கு விரைவில் தேர்தல்!

Friday, March 10th, 2017

கிழக்கு, வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடத்தப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மேற்குறித்த இந்த மாகாணங்களுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாகவோ நடத்தப்பட வேண்டும். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 154 (இ) பந்திக்கு அமைய மாகாண சபை ஒன்று கலைக்கப்பட்டாலே ஒழிய மாகாண சபையின் முதல் கூட்டம் நடத்தப்பட்ட தினத்தில் இருந்து 5 ஆண்டுகள் மாகாண சபை இயங்கும்.

5 ஆண்டுகள் முடிந்த பின்னர், மாகாண சபை கலைக்கப்பட்டதாக கருதப்படும்.

எனினும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என இந்தியா உட்பட மேற்குலக நாடுகள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், தேர்தலை ஒத்திவைப்பது சரியான நடவடிக்கை அல்ல என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தரப்பு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Related posts: