மூன்று நாள்கள் மட்டுமே பல் மருத்துவரின் சேவை அச்சுவேலி வைத்தியசாலையில் நோயளர்கள் பெரும் சிரமம்

அச்சுவேலிப் பிரதேச மருத்துவமனையில் பல் மருத்துவரின் சேவை வாரத்தில் 3 தினங்களுக்கு மட்டும் நடைபெறுவதால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக நோயாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அச்சுவேலிப் பிரதேச மருத்துவமனையில் முழுநேர சேவையில் இருந்த பல் மருத்துவர் ஒய்வு பெற்றதை அடுத்து வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள் மட்டும் கடமை புரிவதற்கு சாவகச்சேரி வைத்தியசாலையில் கடமையில் உள்ளவர்கள் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
திங்கள், புதன், வெள்ளி தினங்களில் பொது விடுமுறை மற்றும் வைத்தியரின் சுயவிடுமுறை ஆகியன வந்தால் பல் மருத்துவரின் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு காத்திருக்கவேண்டி இருப்பதோடு பல் மருத்துவ சிகிச்சையை உரிய வேளையில் பெற்றுக்கொள்ள முடியுமானால் அவதிப்பட வேண்டியுள்ளது. அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் வலி.கிழக்குப் பிரதேசம் மட்டுமல்ல வலி.வடக்கு, வலி.தெற்கு, வடமராட்சி தென்மராட்சி பகுதி மக்களும் சேவையைப் பெற்றுவருகின்றனர்.
நோயாளரின் வசதியைக் கருத்திற்கொண்டு பகுதி நேரமாகச் சேவை ஆற்றிவரும் பல் வைத்தியர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் முழுநேரக் கடமை புரிவதற்குச் சுகாதாரப் பகுதியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related posts:
|
|