மூன்றாவது கட்டம் நடைமுறையில் தெரிவு செய்த ஆயிரம் பேருக்கு தற்போது சிமெந்து விநியோகம்!

Wednesday, November 16th, 2016

சுவர்களுக்குப் பூசி அழகுபடுத்துவதற்கும் வசதியாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் மானியமாக வழங்கப்பட்டு வரும் சீமெந்து பைக்கற்; விநியோகம் இந்த வருடத்திலும் 3ஆவது கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு தடவையும் தெரிவு செய்யப்பட்ட 1000 பயனாளிகள் நன்மையடைந்து வருகின்றார்கள்.

நிதி வசதியின்மை காரணமாக பூச்சு வேலை செய்யமால் அறைகுறையாக இருக்கும் வீட்டுச் சுவர்களை முழுமையாகச் செய்து முடிப்பதற்கு வசதியாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் தேசிய ரீதியாக மாவட்ட அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் 10 சீமெந்துப் பைக்கற்கள் வீதம் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இவ்வருடமும் 3 ஆவது தடவையாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மாவட்ட ரீதியாக 1000 பயனாளிகளுக்கு 10 சீமெந்துப் பைக்கற்கள் வீதம் வழங்கப்பட்டு வருவதால் ஆயிரக்கணக்கான மக்கள் நன்மையடைந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் இவ்வருடத்துக்கான 3 ஆம் கட்ட விநியோகம் பிரதேச ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 1000 பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

cement

Related posts: