மூன்றாம் தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!

Tuesday, August 23rd, 2016

மூன்றாம் தவணைக்கு முன்னர் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வியாழன்,வௌ்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறியுள்ளார்.அத்துடன் அண்மைக்காலமாக டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts: