மூடி தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாபமாக பலி

Tuesday, May 10th, 2016

மூடி தொண்டையில் சிக்கி குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று குருணாகல், நாரம்மல பெத்தெனிகொடவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் எஸ்.எம். மனீஷ சத்சர ஷானக்க என்னும் 1 வயதும் 7 நாட்களுமாகிய குழந்தையே பலியாகியுள்ளது.

குறித்த குழந்தை தனது மூன்று வயதுடைய சகோதரியுடன் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது மூடியை வாயில் போட்டுள்ளது. இதன் பின்னரே மூடி தொண்டையில் சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

Related posts: