முழு கலைத்துறைக்கும் வரி விதிப்பு

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் விவாதிக்கப்பட உள்ள வருமான வரி சட்டமூலத்தில் முழு கலைத்துறைக்கும் வரி அறவிட உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால், கலைத்துறைக்கு வழங்கப்பட்டு வந்த வரி நிவாரணங்களை அப்படியே மீண்டும் வழங்கும் திருத்த யோசனையை தமது கட்சி முன்வைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் புதிய சட்டத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல, யானைகள், மாணிக்கக் கல் கைத்தொழில் உட்பட அனைத்து துறைகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது எனவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
பேருந்து பின் சில்லுக்குள் அகப்பட்ட பெண் மரணம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்த்து தெரிவிப்பு!
ஆயுர்வேத மருத்துவ வசதிகளை கிராம மட்ட மக்கள் மத்தியிலும் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை முன்னெடுங்கள் ...
|
|