முழுவதுமாக மறைக்கும் தலைக்கவசத்தின் இடைக்காலத் தடை நீடிப்பு!

Tuesday, February 21st, 2017

மோட்டார் சைக்கிள் சாரதிகள் முகத்தை முழுவதுமாக மறைக்கும் தலைக்கவசத்தை அணிவதற்கு பொலிஸார் தடைவிதித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நேற்று(20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கமைய, முன்னதாக, பொலிஸாரின் தடையுத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித் மலல்கொட மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். அத்துடன், குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 12ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

helmat

Related posts:

காதி நீதிமன்றங்கள் தொடர்பில் புதிய அரசியலமைப்பில் நிச்சயமாக மாற்றம் செய்யப்படும் - பொதுமக்கள் பாதுகா...
அரச மருத்துவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!
எதிர்வரும் போகத்துக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்கத் நடவடிக்கை - கமத்தொழில் அமைச்சர் ம...