முல்லை. மீனவர்களுக்கு 150 மீன்பிடி படகுகள் இந்தியாவால் அன்பளிப்பு!

முல்லைத்தீவு மீனவர்களுக்கு 150 படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் அன்பளிப்பாக வழங்கும் உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் நேற்று (31)கையொப்பமிட்டன.
மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடல் நிகழ்வில் இந்திய அரசியல் சார்பில் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் வை.கே. சிங்ஹாவும், இலங்கையின் சார்பில் மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யு. எம்.எம். ஆர். அதிகாரியும் கையொப்பமிட்டனர்.
150 மீன்பிடி படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் முல்லைத்தீவிலுள்ள 300 பயனாளிகள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று உலக காச நோய் தினம்
அரச சேவை அதிகாரிகளுக்கு ஆப்பு வைத்த தீர்ப்பு - உதய கம்மன்பில
பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்! இந்திய வர்த்தகர்களுட...
|
|