முல்லையில் இருபது ஏக்கர் காடு திப்பற்றி எரிந்து நாசம்!

Thursday, October 6th, 2016

முல்லைத்தீவு  வசந்திபுரம் பிரதேசத்தில் உள்ள காட்டில் திடீர் என பரவிய  தீயினால் சுமார் இருபது ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று  பிற்பகல்  ஒருமணியளவில்  முறிகண்டி கோவிலுக்கு முன்புறமாகவும்  வசந்திபுரம் கிராமத்து பின்புறமாகவும் உள்ள  காட்டில் திடீர் என தீ பரவியுள்ளது. குறித்த பிரதேசத்தினை  அண்மித்ததாக  இருக்கின்ற இரண்டு இராணுவ முகாமில் காவல்கடமையில் இருந்தவர்களால் அவதானிக்கப்பட்டதனை  அடுத்து  குறித்த பகுதிக்குச் சென்ற இராணுவத்தினர்,  உழவு இயந்திரங்கள் மற்றும் இராணுவ நீர்த்தாங்கி வாகனங்களின் துணையோடு சுமார்  இரண்டு மணி நேரத்துக்குள் தீ  மக்கள் குடியிருப்பினுள் பரவாதவாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்

Untitled-3

Related posts: