முல்லைத்தீவு அதிகாரிகள் அசமந்தம் உவர்நீர் பரம்பல் – ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு கரைதுறைபற்று ஆற்றுக்குக்குறுக்கே அணை உருவாக்கி இரணைப்பாலை, ஆனந்தபுரம், செம்மங்குன்று, மாத்தளன், அம்பலவன் பொக்காணை ஆகிய கிராமங்களுக்கான உவர்ப்பரம்பலை தடுத்து நிறுத்துமாறு மேற்படி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சாலை ஆறு மழைக்காலத்தில் பெருக்கெடுப்பதன் காரணமாக மேற்படி கிராமங்களில் உவர்நீர்ப் பரம்பல் ஏற்பட்டுள்ளதால் நன்னீர் கிணறுகள் உவர்நீராக மாறி வருகின்றன. ஆனந்தபுரத்தில் தற்பொது நீர் சுத்திகரிக்கப்பட்டு பணத்திற்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில் சாலை ஆற்றினை மாத்தளன் பகுதியில் மறித்து உவர்த் தடுப்பிணையினை ஏற்படுத்தி கிராமங்கள் எதிர்காலத்தில் பாலைவனமாகாமல் தடுக்க முடியும் ஏற்கனவே இந்த பகுதியில் பயன் தருமரங்கள் அழியத் தொடங்கியுள்ளன. இந்த விடயம் குறித்து கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச செயலகங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் என்பவற்றில் இடம்பெறும் கூட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளினால் பிரஸ்தாபிக்கப்பட்ட போதும் உவர்பரம் பலைத்தடுப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். உவர்ப் பரம்பலினால் 1000 வரையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
Related posts:
|
|