முல்லைத்தீவுமாவட்டத்தில் மாகாணசபை தேர்தலுக்குரிய எல்லை நிர்ணயத்திற்குரிய கருத்துக்கணிப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெ ற்றுள்ளது.

Thursday, November 30th, 2017

முல்லைத்தீவுமாவட்டத்தில் மாகாணசபை தேர்தலுக்குரிய எல்லை நிர்ணயத்திற்குரிய கருத்துக்கணிப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெ ற்றுள்ளது.
முல்லைமாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் கா.காந்தீபன் அவர்களின் தலைமையில் 2017.11.29 இன்று மாவட்ட செயலகத்தில் மாகாணசபை தேர்தலுக்குரிய எல்லை நிர்ணயத்திற்குரிய கருத்துக்கணிப்பு இடம்பெற்றுள்ளது.
பொதுமக்கள் மாகாணசபை உறுப்பினர்கள் கட்சி இணைப்பாளர்கள் ஆகியோர் இக்கருத்துக்கணிப்பிற்கு பங்கேற்றுள்ளனர்.
இக்கருத்துக்கணிப்பினை ஜனாதிபதினால் நியமிக்கப்பட்ட மாகாண எல்லை நிர்ணயகுழுவின் தவிசாளர் கலாநிதிகே.தவலிங்கம் தலைமையிலான குழுவினர் இவ்விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளது. புதுக்குடியிருப்பு கரைதுறைப்பற்று துணுக்காய் ஆகிய 3; பிரதேசங்களிற்கும் 3 உறுப்பினர்கள் தொகுதிவாரியாக் தெரிவுசெய்யப்படுவார்கள். ஏனைய 2 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவுசெய்யப்படுவார்கள் எனஆணைக்குழுவின் தலைவர் கே.த்வலிங்கம் தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: