முல்லைத்தீவில் இயற்கை வளங்கள் அழிப்பு : மக்கள் குற்றச்சாட்டு!

Wednesday, July 25th, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கை சூழலை பாதிக்கும் வகையில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றதாக பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வட மாகாணத்திலேயே அதிகளவு இயற்கை வளங்களை கொண்ட பகுதியாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது.
கடந்த 2009ஆம் ஆண்டின் பின் இங்கு சட்டத்திற்கு முரணான வகையில் மணல், கிரவல் அகழ்வுகள் மற்றும் காடழிப்புக்கள் என்பன இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரவல், மணல் அகழ்வுகளுக்கான அனுமதிகள் தென்பகுதியை சேரந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
ஒட்டுசுட்டான், துணுக்காய் போன்ற பகுதிகளிலும் பெருமளவான கிரவல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், காடுகளும் அழிக்கப்பட்டுள்ளன.
இதனைவிட வவுனிக்குளம் மற்றும் ஏனைய குளங்களுக்கு நீரை சேர்க்கும் ஆறுகள் துண்டாடப்பட்டு மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அனுமதிகள் யாவும் தென்பகுதியை சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட அனுமதிகளால் வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: