முறையான விடுமுறை அனுமதியின்றி பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இராஜினாமா அறிவிப்பை வெளியிடுமாறும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
Thursday, May 9th, 2024கொரோனா – 19 தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு கோவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக வெளிநாட்டில் இருந்து உரிய திகதியில் பணிக்கு திரும்பத் தவறிய அரச அதிகாரிகளின் விடுப்பு தொடர்பாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, முறையான விடுமுறை அனுமதியின்றி பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இராஜினாமா அறிவிப்பை வெளியிடுமாறும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|