முறைசாராக் கல்விப்பிரிவு தொழிற்பயிற்சி ஆரம்பம்!

Saturday, May 12th, 2018

யாழ்ப்பாணம் வலயக் கல்வி முறைசாராக் கல்விப் பிரிவினரால் 2018 ஆம் ஆண்டிற்கான தொழிற்பயிற்சி நெறிகள் 14.05.2018 திகதி திங்கட்கிழமை பின்வரும் நிலையங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எனவே இத் தொழிற்பயிற்சி நெறியில் பாடசாலை கல்வியை பெறத் தவறிய மாணவர்களும் தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்திருக்கும் அனைவரும் இணைந்து கற்க முடியும்.

அதற்கான அனுமதியினை குறிப்பிட்ட நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணக் கல்வி வலயப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

கணனிப் பாடநெறியை முறைசாராக் கல்விப் பிரிவு தொழில் பயிற்சி நிலையம்இ கோப்பாயிலும் மனை முகாமைத்துவப் பாடநெறியை முறைசாராக் கல்விப் பிரிவு தொழிற்பயிற்சி நிலையம்இ கோப்பாயிலும் புத்தகம் கட்டுதல் பாடநெறியை இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையத்திலும் சிரட்டை வேலைப் பாடநெறியை யாழ்ப்பாணம் கைவினைப் பயிற்சி நிலையம்இ ஊரெழுவிலும் செப்புத் தகட்டு வேலைப்பாடுகள் பாடநெறியை யா.உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts:


யாழ். கொக்குவில் பொதுநூலகத்தின் ஏற்பாட்டில்  புலமைப் பரிசில் மாணவர்களுக்கான இலவச பயிற்சிப்  பரீட்சைய...
பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கின் இரண்டாவது ப...
நாட்டு நிலைமையை ஸ்திரப்படுத்தியவுடன் தேர்தல் நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!