முறுகண்டியில் விபத்து – இளைஞன் பலி!

Wednesday, March 30th, 2016
முறுகண்டியில் ஏற்பட்ட விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று பிற்பகல் 6 மணியளவில் முறுகண்டியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோட்டர் வாகனம் மோதியுள்ளது.
இந்நிலையில் விபத்தின் போது படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் உயிரிழந்தவர் கனகராயன் குளத்தை சேர்ந்த 27 வயதான செல்வராசா கலைச்செல்வன் என தெரியவருகிறது.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts: