முறிந்த மின்கம்பம் இன்னும் சீர்செய்யப்படவில்லை!

Monday, April 4th, 2016

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் முறிந்து விழுந்த மின்சாரக் கம்பம்,  இன்னும் திருத்தப்படாத நிலையில் காணப்படுகின்றது.

குறித்த மின்கம்பத்தை வாகனமொன்று மோதிச் சென்றமையால், அந்த மின்கம்பம் முறிந்து விழுந்தது. எனினும் அது இதுவரை சீர் செய்யப்படாமல் இருப்பதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் காரணமாக இவ்வீதி வழியாக செல்லும் மக்கள் மின்சாரத் தாக்கத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம் என்றும் மக்கள் அச்சமடைகின்றனர்.

Related posts: