முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பயிற்சி ஆரம்பம்!

Thursday, January 17th, 2019

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறி வழங்கும் செயற்றிட்டம் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 360 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆரம்பப் பிள்ளைப்பருவ முன்பள்ளிகளின் உதவிப் பணிப்பாளர் சி.கணேசலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

வடமாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கே இப்பயிற்சி நெறி வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

இப்பயிற்சி வகுப்புக்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச்  சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வவுனியா மகாவித்தியாலயத்திலும் இடம்பெறவுள்ளது. இப்பயிற்சி நெறிக்கான அனுசரணையை ஆறுதல் நிறுவனம் வழங்குவதோடு நிதிப்பங்களிப்பை றோட்டறிக் கழகம் வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: