முன்னாள் போராளிகள் என்பதால் புறக்கணிக்கப்படுகின்றோம்!

Saturday, July 1st, 2017

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் என்ற காரணத்தால் தமக்கு வேலைவாய்புக்கள் வழங்கப்படுவதில்லை என முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளான 36 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கு உள்விவகார அமைச்சில்   நேர்முகத் தேர்வு நடைபெற்றது. குறித்த நேர்முகத்தேர்வை தொடர்ந்து அமைச்சர் சுவாமிநாதனை சந்தித்து உரையாற்றிய போதே அவர்கள் இதை குறிப்பிட்டுள்ளனர்.

புனர்வாழ்வின் பின்னரே தாம் பட்டப்படிப்பை நிறைவுசெய்ததாகவும், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் என்ற ஒரு காரணத்தினால் தமக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts: