முன்னாள் ஜனாதிபதியின் மகளுக்கு போலிநாயணத்தாள்களை வழங்கிய வர்த்தகருக்கு 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!

Tuesday, May 23rd, 2017

முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் மகளான துலாஞ்சலி ஜயகொடிக்கு போலி நாணயத்தாள்களை வழங்கிய சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மஹரகம பிரதேச வர்த்தகருக்கு, 20 இலட்சம் ரூபா இழப்பீட்டுத்தொகையினை செலுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய வழக்கு மேல்நீதிமன்ற நீதிவான் கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது ,குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகர் இழப்பீட்டுத்தொகைக்கு மேலதிகமாக 5 இலட்சம் ரூபா அபராதத்தொகையினை செலுத்துமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. அதேபோல், இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டார்

Related posts: