முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் காலமானார்!

Wednesday, July 27th, 2016

வட மத்திய மாகாண சபையின் முன்னாள் சபை முதல்வரும் அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் நண்பனாக செயற்பட்டவருமான சட்டத்தரணி ஆர்.பி. அபேசிங்க நேற்று மாலை காலமானார்

இன்னார் வட மத்திய மாகாண சபையின் முன்னாள் சபை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக செயலாற்றியுள்ளதுடன் சுமார் 40 வருடங்களாக சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.

அநுராதபுரம் உயர்நீதிமன்ற சட்டத்தரணியான அபேசிங்க, குறித்த நீதிமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் தமிழ், முஸ்லிம் மக்கள் சார்பில் இலவசமாக ஆஜராகி நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் துணை நின்றுள்ளார்.

தற்போது வடமத்திய மாகாண சபையின் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு தலைவராக பதவி வகித்த அவர், கடும் சுகவீனமுற்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது

Related posts: