முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரிடம் புலனாய்வுத் துறை விசாரணைகள்!

Wednesday, April 15th, 2020

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிஷாஜ் பதியுதீனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்றையதினம் புத்தளம் பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிஷாஜ் பதியுதீன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, தடுத்து வைக்கும் உத்தரவுக்கு அமைய முன்னெடுக்கப்படும் விசாரணைகளை அடுத்து நாளைதினம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து புத்தளத்தில் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய நபரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவரை நாளைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: