முன்னாள் அமைச்சர் அலவி மௌலானா காலமானார்!

Thursday, June 16th, 2016

முன்னாள் அமைச்சரும், மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அலவி மௌலானா தனது 84ஆவது வயதில் நேற்று (15) காலமானார்.

கடந்த சில மாதங்களாக சுகயீனமுற்றிருந்த அவர் நேற்று மாலை காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

1932ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி பிறந்த அலவி மௌலானா தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் பதவிவகித்துள்ளார். மேல்மாகாணத்தின் 5ஆவது ஆளுநராக கடமைபுரிந்த அவர், வர்த்தக தொழிற்சங்கத்தின் ஊடாக 1948ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்தார்.

1956ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமையைப் பெற்ற அலவி மௌலானா 2001ஆம் ஆண்டிலிருந்து 2002ஆம் ஆண்டுவரை தொழிலாளர் அமைச்சராக பதவிவகித்திருந்தார். மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தவிசாளராகவும், சுதந்திர ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவராகவும் அவர் கடமைபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: