முதிரை மரக்குற்றிகளை கடத்தியவர் கைது!

Wednesday, September 14th, 2016

முதிரை மரக்குற்றிகளை பட்டா ரக வாகனத்தில் ஏற்றிச் சென்ற நபரை ஏ – 9 வீதி கொக்காவில் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (13) விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாகனத்திலிருந்து 24 முதிரை மரக்குற்றிகளும் கைப்பற்றப்பட்டன.கொக்காவில் ஐயன்குளம் பகுதியிலிருந்து கடத்தி வரப்பட்ட மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட நபரும், சான்றுப் பொருட்களும் மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

article_1473763647-b

Related posts: