முதியோர் பராமரிப்புக்கு நடவடிக்கை!
Saturday, May 6th, 2017சகல மாவட்டங்களிலும் முதியோர் பராமரிப்பு அலகுகளை அமைப்பதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் சனத்தொகையில் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதினால் அவர்களின் நலனைக்கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தீர்மானத்திறகு அமைவாக உலக வங்கி, ஜெய்க்கா நிறுவனம் ஆகியவற்றின் துணையுடன் தலங்கம அரச மருத்துவமனையை அபிவிருத்தி செய்து முதியோர் பராமரிப்பு அலகை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கு மேல் மாகாண சபையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் தலைமையில் சமீபத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட சுகாதார மாநாட்டில் இதுபற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டன. நாட்டிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் மலசல கழிவுத் தொகுதியை உரிய முறையில் பேணும் திட்டம் குறித்து இணக்கம் காணப்பட்டது. மாத்தளை, தம்புள்ளை வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதென தீர்மானிக்கப்பட்டதென அமைச்சர் கூறினார்.
Related posts:
|
|