முதியவர் சடலமாக மீட்பு!

Wednesday, July 20th, 2016
வவுனியா வெளிக்குளத்தின் அலைகரைப்பகுதியில்  முதியவர் ஒருவரின்  சடலம் ஒன்று இன்று (20) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் பகுதியை சேர்ந்த அந்தோனி மயில்வாகனம் என்பவரது (65 வயது) சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வவுனியா பொலிஸார் இவரின் மரணம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த இறந்தவரின் உறவினர்
காலில் ஏற்பட்ட நோய் காரணமாக 18-07-2016 வவுனியா வைத்தியசாலையில் மயில்வாகனம் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அன்றைய தினம் அவரை பார்க்க சென்ற போது வைத்தியசாலையில் அவர் இருக்கவில்லையென தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியான தேடுதலின் பின் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மயில்வாகனத்திற்கு எதிரிகள் யாரும் இல்லை என்றும் அவருக்கு கண்பார்வை குறைவு என தெரிவித்ததுடன் முதிய வயதில் வரும் மாறாட்ட குணம் காணப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

v.body_3

Related posts: