முதல் தடவையாக பெண்கள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு!

Thursday, October 7th, 2021

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிவரும் பெண் அதிகாரிகள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர, நிஷாந்தி ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகக் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில், பெண் காவல்துறை அதிகாரிகள் பிரதி பொலிஸ் மா அதிபர்களாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது இதுவே முதலாவது சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: