முதலாவது செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மரணம்!

Monday, November 21st, 2016

உலகின் முதலாவது செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த நிபுணர் டென்டன் கூலி (வயது-96) அமெரிக்காவில் காலமானார். அவரது மனைவி லூயிஸ் சில வாரங்களுக்கு முன்னர் தனது 92ஆவது வயதில் இயற்கை எய்தினார். 1920ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22ஆம் திகதி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், ஹீஸ்டன் நகரில் பிறச்த டென்டன் ஆர்தர் கூலி, ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அறுவைச் சிகிச்சை மருத்துவத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார்.

உலகின் முதலாவது செயற்கை இருதய மாற்று அறுவை சிகிச்சையை 1969 ஆம் ஆண்டு இவர் வெற்றிகரமாகச் செய்துள்ளார். இருதய அறுவைச் சிகிச்சையின் முன்னோடி என்று பெயர்பெற்ற அவர் கடைபிடித்த நுட்பமுறைகளே இன்றுவரையும் பல்வேறு இதய நிபுணர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. டென்டன் கூலி மற்றும் அவரது தலைமையிலான மருத்துவர் குழு ஒரு லட்சத்து 18ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

doctor

Related posts: