முதலாவது கட்ட முன்னிலை வீதி ஒழுங்கு வேலைத்திட்டம் வெற்றியளிப்பு!

முன்னிலை வீதி ஒழுங்கு வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் வெற்றிகரமான முறையில் முடிவடைந்துள்ளதாக செயற்றிட்டத்தின் ஆலோசகர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார்.
மருதானை, பொரளை பஸ் வண்டிகளுக்கான முன்னிலை வீதி ஒழுங்கு வேலைத்திட்டத்துடன் முதலாவது கட்டம் முடிவடைந்தது. இந்த வருடத்திற்கான பஸ் வீதி ஒழுங்கு வேலைத்திட்டம் முடிவடைந்துள்ளதாக அவர் கூறினார். இதற்கென 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. பொரளை – மருதானை, மருதானை – பொரளை வீதி ஒழுங்கை மேற்கொள்வதற்காக கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் அடுத்த ஆண்டில் அமுல்ப்படுத்தப்படவுள்ளது. இதற்கென 160 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
அதிபர்,ஆசிரியர்களுக்கு தன்னிச்சையான இடமாற்றங்கள்:அதிர்ப்தியில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!
20 பாடசாலைகளுக்கான விசாரணை இம்மாதம் பூர்த்தி!
ஊரடங்கு தொடர்பில் இந்தவாரம் முக்கிய தீர்மானம் - இராணுவத் தளபதி அறிவிப்பு!
|
|