முடிவுக்கு வந்தது பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு !

Saturday, November 19th, 2016

பேருந்து  ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தனியார் பேருந்து  ஊழியர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று முதல் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பினூடாக தமது கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக சங்கத்தின் ஏற்பாட்டாளர் யு.கே. குமாரரத்ன தெரிவித்துள்ளார்.

வீதி விதிமுறைகளை மீறுவோருக்கு 2500 ரூபா அபராதம் விதிப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று காலி வீதியில் பேருந்து ஊழியர்களால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பிலிருந்து கதிர்காமம், தங்காலை, மாத்தறை, காலி மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளுக்கான தனியார் பேருந்துகள் நேற்று சேவையில் ஈடுபடாததால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

sri-lanka-bus

Related posts: