முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட 200 கிலோ மாட்டிறைச்சி பொலிசாரால் மீட்பு!

Saturday, December 8th, 2018

புங்குடுதீவிலிருந்து முச்சக்கர வண்டியில் திருட்டுத்தனமாக கொண்டுச்செல்லப்பட்ட 200 கிலோ மாட்டிறைச்சி வேலணைப் பகுதியில் ஊர்காவற்துறை உதவி பொலிஸ் பரிசோதகரால் மீட்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை உதவி பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தன் தலைமையில் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பின் போது குறித்த மாட்டிறைச்சி முச்சக்கர வண்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் மாடு கொல்லப்பட்டு இறைச்சியாக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்டவரின் விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக கூறப்படுகிறது.

Related posts: