முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு 3 மாத கால அவகாசம்!

Monday, June 13th, 2016

மேல் மாகாணத்தில் காணப்படும் வாடகை முச்சக்கர வண்டிகள் அனைத்தையும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளை நிர்ணயம் செய்யும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக வாடகை முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் நுவன் வணிகரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பதிவு செய்யப்படும் வாடகை முச்சக்கர வண்டிகளுக்கான அடையாள அட்டைகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த மாவட்டத்திற்கான முச்சக்கரவண்டி என அடையாளப்படுத்துவதற்கான ஸ்ரிக்கர்களும் வாடகை முச்சக்கர வண்டிகளின் பின்புறத்தில் ஒட்டப்படவுள்ளதாகவும் நுவன் வணிகரத்ன கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தில் தற்போது 5 இலட்சம் முச்சக்கர வண்டிகள் காணப்படுவதாகவும், பயணிகளின் நலன் கருதி இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து வாடகை முச்சக்கரவண்டிகளையும் பதிவு செய்வதற்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான புதிய அலுவலகங்களும் திறக்கப்படவுள்ளதுடன் வாடகை முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வது கட்டாயமான விடயம் எனவும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் நுவன் வணிகரத்ன தெரிவித்துள்ளார்.

 

Related posts: