முக்கொலை பிரதிவாதியின் பிணை மனு நிராகரிப்பு!

அச்சுவேலி முக்கொலை வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள பிரதிவாதியின் பிணை மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நிராகரித்துள்ளார்.
குறித்த பிணை மனு தொடர்பான விசாரணைகள் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கின் எதிரிக்கு அவசரமாகப் பிணை வழங்க முடியாது என தெரிவித்து, நீதிபதி விசாரணையை ஒத்திவைத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று விசாரணை இடம்பெற்றபோது, வழக்கின் நீதித்தன்மையை பொறுத்தும் சாட்சிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டும் பிணை மனுவை நிராகரிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
அச்சுவேலி கதிரிப்பாய் என்ற இடத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி நித்தியானந்தன் அருள்நாயகி, நித்தியானந்தன் சுபாங்கன், யசோதரன் மதுஷா ஆகிய மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகள் தொடர்பில் அந்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|