முகம் கழுவச் சென்ற குடும்பத்தலைவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தொண்டமனாறு கடற்கரை வீதியில் சம்பவம்!

Sunday, September 27th, 2020

கிணற்றடியில் முகம் கழுவச் சென்றபோது மயங்கி விழுந்த  குடும்பத்தலைவர், உயிரிழந்த சம்பவம் ஒன்’று தொண்டமனாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தொண்டமனாறு கடற்கரை வீதியில் வசிக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த அன்ரன் ஜோர்ஜ் வயது-35 என்ற 2 பிள்ளைகளின் தந்தையே  உயிரிழந்துள்ளார்.

கிணற்றடிக்குச் சென்ற அவர், மயங்கிச் சரிந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அதனை அவதானித்த உறவினர்கள், உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மந்திகை வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: